இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்?
இந்திய அணி
  • News18
  • Last Updated: August 19, 2019, 7:30 AM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரையும் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் சமுக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள பிசிசிஐ, அது வெறும் புரளி என்று விளக்கமளித்துள்ளது.


Also watch

First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்