ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி  191 ரன்கள் குவித்துள்ளது.

  நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.  முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது  ஆட்டமும்  மழையால் பாதிகப்படும் அபாயம் ஏற்பட்டது.

  இந்த நிலையில் மவுன்ட் மாங்கானு தொடங்கிய 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பந்த் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றோரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

  தொடர்ந்து இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.

  இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111  ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published: