முகப்பு /செய்தி /விளையாட்டு / வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான்?

வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான்?

தவான் - கே.எல்.ராகுல்

தவான் - கே.எல்.ராகுல்

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் வீரர் முகமது சமி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக உம்ரான் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காயம் காரணமாக வங்கதேச தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட

கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை கால்பந்து தொடர்: வாழ்வா? சாவா? நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்

இந்நிலையில் காயம் காரணமாக வேகப்பந்து வீரர் முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில், காயம் அடைந்த முகமது சமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச பட்டியல்:

ரோஹித் சர்மா (கேப்டன்) ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்) ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், தீபக் சாஹர், முகமது சிராஜ்

First published:

Tags: Bangladesh, India captain Rohit Sharma, India vs Bangladesh