டி20 போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான இலக்கை சேசிங் செய்வதில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையோன முதல் டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் முன்ரோ 59, ரோஸ் டெய்லர் 54 மற்றும் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்தனர்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சிதறவிட்டது. இந்திய அணியின் அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். தொடக்கத்தில் ராகுல், விராட் அதிரடி காட்ட இறுதி ஓவர்களில் ஷ்ரோயஸ் ஐயர் அபாரமாக விளையாடியதால் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்த ஷ்ரோயஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டி20 போட்டியில் இந்திய அணி சேசிங் செய்த 3வது பெரிய இலக்கு இதுவாகும்.
இந்திய அணி இதுவரை 200க்கும் அதிகமான ரன்களை 4 முறை சேஸிங் செய்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேசிங் செய்து 2வது இடத்தில் உள்ளது.
200க்கும் அதிகமான ரன்களை சேசிங் செய்த டி20 போட்டி
208 vs WI Hyderabad 2019
207 vs SL Mohali 2009
204 vs NZ Auckland 2020
202 vs Aus Rajkot 2013
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.