டி20 உ.கோப்பைக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் போட்டி - எங்கு? எப்போது?
டி20 உ.கோப்பைக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் போட்டி - எங்கு? எப்போது?
பாபர் அசாம் -கோலி.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டி20-யில் களம் காண்கின்றன
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டி20-யில் களம் காண்கின்றன.
அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ரன, ஆகவே அதற்கு ஆசியக் கோப்பை டி20யில் ஒரு முன்னோட்டமாக இந்தப் போட்டி அமையவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) பிசிசிஐ-யிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும், போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானுடன் மோதக்கூடும், மேலும் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் சந்தித்த பின்னர் சர்வதேச அரங்கில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும், இதில் உலகக்கோப்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை காலி செய்ததற்குப் பழி தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆசியக் கோப்பையை இந்தியா 6 முறை வெல்ல, இலங்கை 5 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் 2 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் இந்திய அணி எவ்வளவுக்கெவ்வளவு ஆடுகிறதோ, டெஸ்ட், ஒருநாள் என்று ஆடுகிறதோ அப்போதுதான் இங்கிலாந்து போன்ற அணிகளை எளிதில் தோற்கடிக்க முடியும், பாகிஸ்தானுடன் ஆடுவது, வெற்றி பெறுவது என்பது இந்திய வீரர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பூஸ்ட், எனவே அடிக்கடி ஆட வேண்டும்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.