நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்றோ முறையே 33, 26 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கிராண்ட்ஹோம் நிலைத்து ஆடாத நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வில்லியம்சனும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 17. 3 ஓவரில் மூன்று வெக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 57 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் எடுத்தனர்.
சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.