இந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா!

விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணியினரின் புகைப்படத்தை மேற்கிந்திய வீரர் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா!
பிராவோ பகிர்ந்த புகைப்படம்
  • Share this:
இந்திய அணியின் ரோஹித் சர்மா, தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் லாரா தனது வீட்டில் விருந்தளித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி அசத்தி உள்ளது.

இந்திய அணி சிறந்த ஃபார்மில் உள்ளதால் டி20 மற்றும் ஒரு நாள் தொடரின் எந்த போட்டியிலும் தோல்வி பெறாமல் வெற்றியடைந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தொடராக இந்த டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது.


மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணியினருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் ப்ரையன் லாரா தனது வீட்டில் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சஹால். கேதர் ஜாதவ் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை மேற்கிந்திய வீரர் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, பிராவோ, சுனில் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 நாள் கொண்ட டெஸ்ட் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மயங்க் அகர்வால், பும்ரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Also Read : விநோதமாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றிய ஸ்டிவ் ஸ்மித் - வீடியோ


Also Watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்