ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

news18
Updated: September 3, 2019, 11:01 AM IST
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி
இந்திய அணி
news18
Updated: September 3, 2019, 11:01 AM IST
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளை பெற்று இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி  416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விஹாரி  111 ரன்கள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் 468 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் அசாத்திய பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 210 ரன்களுக்குள் ஆல்-அவுட்டானது.


இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 2 போட்டிகளையும் கைப்பெற்றியதால் இந்திய அணி 120 புள்ளிகள் பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து, இலங்கை அணிகள் 60 புள்ளிகளை பெற்று 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 32 புள்ளிகளை பெற்று 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடருடன் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு  2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

Loading...Also watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...