ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Eng | இந்திய அணியின் பலம் , பலவீனம் என்ன ? ஒர் விரிவான அலசல்

Ind vs Eng | இந்திய அணியின் பலம் , பலவீனம் என்ன ? ஒர் விரிவான அலசல்

மாதிரி படம்

மாதிரி படம்

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி - இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் யார்? 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதில் இந்திய அணி - இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.

நடப்பு தொடரில் இதே மைதானத்தில் இந்திய அணி - வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் முறையாக விளையாடவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு விடைகிடைத்துள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் சரியானதால் தொடக்க ஆட்டக்காரராக ராகுலுடன் சேர்ந்து அதிரடிக்கு தயாராகவுள்ளார் ரோஹித்.

டி20 தொடரில் ராகுல் 100வது சிக்ஸரை பறக்கவிட இன்னும் ஒரே சிக்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது இந்த மகிழ்சியை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடப்பு உலகக் கோப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடிய விராட் மூன்று அரைசதம் விளாசியதுடன் 246 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளார்.

இவரை தொடர்ந்து களமிறங்கும் ஸ்கை சூர்யா 225 ரன்கள் விளாசி அசுர ஃபார்மில் உள்ளார். டாப் ஆர்டரில் களமிறங்கும் நான்கு வீரர்களும் எதிரணிக்கு சிம்மசொப்பனமே.விக்கெட் கீப்பர் கார்த்திக் ஃபாம் அவுட் மற்றும் காயம் காரணமாக அவருக்கு பதில் ரிஷப் பண்ட் களமிறங்கவுள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஆல் ரவுண்டர் பாண்டியா டெத் ஓவரில் ரன் சேர்ப்பதில் சுதாரிப்பு தேவை.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் அசத்தலாக செயல்பட்டுள்ளார். ஐந்துமுறை பட்லரை வீழ்த்தி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். இவருடன் ஹர்ஷ்தீப் சிங் மற்றும் சமி ஆகியோரும் இங்கிலாந்து வீரர்களை பதம் பார்க்க காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கோலியின் மற்றோரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

சுழலில் சுழன்று அடிக்க தமிழ் நாடு வீரர் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் தயாராக உள்ளனர். இங்கிலாந்து அணியை பொருத்தவரை டேவிட் மாலன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்குவது சந்தேகமே. பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் என பந்துவீச்சாளர்களை மிரட்டும் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் விக்கெட் எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆல் ரவுண்டர் சாம் கரண் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு அச்சுருத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. மொயின் அலி மற்றும் அடில் ரஷித் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்தால் மிடில் ஆர்டரில் இந்தியாவின் ரன் எண்ணிக்கை உயர்வதற்கு வழிவகுக்கும்.

இரு அணிகளும் இதற்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கடைசி யுத்தத்தில் பாகிஸ்தானுடன் மோதபோவது இந்தியாவா? இங்கிலாந்தா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

Published by:Arunkumar A
First published:

Tags: India Vs England, T20 World Cup