முகப்பு /செய்தி /விளையாட்டு / இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்... ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்... ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிப்பு

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை. மிகத் தெளிவான முறையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளோம். - தேர்வுக்குழு

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை. மிகத் தெளிவான முறையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளோம். - தேர்வுக்குழு

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை. மிகத் தெளிவான முறையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளோம். - தேர்வுக்குழு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 4-ம்தேதி நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் 12-ம்தேதி நடைபெறவுள்ளது. இந்தப்போட்டி இரவு பகல் ஆட்டமாக நடைபெறும்.

இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டித் தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா கூறுகையில், 'ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை. மிகத் தெளிவான முறையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளோம். அவருக்கு உடல் நல பாதிப்பு போன்ற ஏதேனும் ஏற்பட்டால் மட்டுமே இன்னொருவர் கேப்டனாக செயல்படுவார்.' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க - தோனியிடம் உள்ள அதே குணங்கள் ரோகித் சர்மாவிடமும் உள்ளன: பார்த்திவ் படேல்

இந்திய அணியின் முக்கிய வீரர்களான செதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மற்ற முக்கிய வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணம் அடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் குணம் அடைந்தால் டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதேபோன்று ரவிச்சந்திரன் அஷ்வின் உடல் தகுதி பெற்றால் அவரும் டெஸ்ட் தொடரில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க - 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் மும்பையில் நடக்கிறது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் :

ரோஹித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), KS பரத், ஆர் ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்).

இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடர் இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் சிராஜ், , ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா(துணை கேப்டன்), அவேஷ் கான்.

First published:

Tags: India Cricket