இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் முழுமையாக ரத்து - பிசிசிஐ

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் முழுமையாக ரத்து - பிசிசிஐ
INDvSA
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறத்தல் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நேற்று (மார்ச் 12) தர்மசாலா மைதானத்தில் நடைபெற இருந்த முதல் ஒரு நாள் மழையின் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக  மார்ச் 15-ஆம் தேதி லக்னோவிலும், மார்ச் 18-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை முழுவதுமாக ரத்து செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading