பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது : கவுதம் கம்பீர்

கம்பீர்

பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியை தவிர்க்க வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடக்கூடாது என்று பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

  இதையடுத்து உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கோரிக்கை அதிகரித்தது. இது குறித்து கவுதம் கம்பீர், ‘புல்வாமா தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியையும் தவிர்க்க வேண்டும்.

  ஐசிசி உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பது இந்தியாவுக்கு கடினமானதுதான். ஆனால் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடி 2 புள்ளிகள் கிடைப்பது முக்கியமல்ல. நாடு தான் முக்கியம், நமது ராணுவ வீரர்களின் உயிர் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: