ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரோஹித், கோலி, சூர்யகுமார் அசத்தல் - நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

ரோஹித், கோலி, சூர்யகுமார் அசத்தல் - நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

இந்திய அணி

இந்திய அணி

விராட் கோலி - சூர்ய குமார் யாதவ் ஜோடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து ஸ்கோரை உயர்த்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaAustraliaAustraliaAustraliaAustralia

   டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி, நெதர்லாந்து அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

  டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இந்திய நேரப்படி இந்தப்போட்டியானது பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய அதே அணியுடன் இந்தியா களமிறங்கியது.

  தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 3-வது ஓவரின் நான்காவது பந்திலே 9 ரன்களில்  நடையை கட்டினார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். பவர் ப்ளேயில் முதல் விக்கெட்டை இழந்ததால் ரோகித் - கோலி இருவரும் பொறுமையாக விளையாடினார்.

  கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் கடந்த நிலையில் 12-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.  ரோஹித் ஷர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன்  53 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் கோலியுடன் இணைந்தார். இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை உயர்த்தினர். விராட் கோலி சில அதிரடியான ஷாட்களை ஆடி அரைசதம் கடந்தார்.

  பின்னர் விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்தனர். சூர்ய குமார் யாதவ் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். இறுதி 5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 65 ரன்களை எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62, ரோஹித் ஷர்மா 53, சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தனர்.  நெதர்லாந்து அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: India captain Rohit Sharma, Indian cricket team, Virat Kohli