அசைக்க முடியாத முன்னிலையில் இந்திய அணி... வெற்றி உறுதி

3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது.

news18
Updated: September 2, 2019, 7:26 AM IST
அசைக்க முடியாத முன்னிலையில் இந்திய அணி... வெற்றி உறுதி
இந்திய அணி
news18
Updated: September 2, 2019, 7:26 AM IST
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான  2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் நாளில் மாயன் அகர்வால் அரை சதமடித்து 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதேபோல் விராட் கோலியும் அரை சதம் கடந்து 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  5 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. விகாரி 42 ரன்னிலும், ரிஷப் பந்த் 27 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.


இதையடுத்து 2-ம் நாளின் முதல் பந்திலேயே ரிஷப் பந்த் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். நிதானமாக விளையாடிய விஹாரி சதமடித்து அசத்தினார். இறுதியாக 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் கார்ன்வால் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர்  5 விக்கெட்டுகளையும், ரோச், பிரத்வைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. முக்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மையர் 34 ரன்கள் அடித்தார். மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் 3-வது நாள் ஆட்டத்தின் போது 54 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் அடித்திருந்த போது டிக்ளேர் செய்தனர். இந்திய அணியில் ரஹானே 64 ரன்களும், விஹாரி 53 ரன்களும் அடித்தனர்இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது.Also watch

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...