Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Ban | முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இந்திய அணி... பேட்டிங்கில் தடுமாறும் வங்கதேசம்

Ind vs Ban | முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இந்திய அணி... பேட்டிங்கில் தடுமாறும் வங்கதேசம்

Ind vs Ban

Ind vs Ban

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

Also Read : சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் நஜ்முல் உசேன் முதல் பந்திலேயே சிராஜ் பந்துவீச்சில் பந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். அடுத்து வந்த யாசிர் அலி உமேஷ் யாதவ் வேகத்தில் சிக்கி அவுட்டானார். இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. ஜாகீர் உசேன் மற்றும் லித்தன் தாஸ் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Ind vs Ban