ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் அசத்தல் ஆட்டம்! இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் அசத்தல் ஆட்டம்! இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 387 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா 159 ரன்கள் குவித்துள்ளார்.

  இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தனர்.

  இருவரும் விக்கெட் இழப்பின்றி, 37 ஓவர்கள் வரை விளையாடி 227 ரன்கள் குவித்தனர். இருவரும் சதத்தைக் கடந்தனர். 104 பந்துகளில் 102 ரன்கள் குவித்திருந்திருந்தநிலையில், அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பொல்லார்ட் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பாட்னர்ஷிப்பைக் கொடுத்தார். மறுபுறம் ரோஹித் சர்மா அடித்து துவைத்தார்.

  அவர், 138 பந்துகளில் 17 பவுண்டர்களும், 5 சிக்ஸர்களுடன் 159 ரன்கள் குவித்திருந்த நிலையில் கோட்ரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 387 ரன்கள் குவித்தது.

  Also see:

   

  Published by:Karthick S
  First published:

  Tags: Cricket, India team