பயிற்சி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் திணறல்... இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல்அவுட்...!

பயிற்சி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் திணறல்... இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல்அவுட்...!
  • Share this:
நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாடியது.


டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில், ப்ர்திவ் ஷா இருவரில் யாரை களமிறக்கலாம் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதற்கு பயிற்சி ஆட்டம் தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.மயங்க் அகர்வால் 1 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா மற்றும் சுப்மன் கில் டக் அவுட்டாகியும் வெளியேறினர். புஜாரா - விஹாரி ஜோடி பொறுப்புடன் விளையாடினர். விஹாரி 101 ரன்னிலும் புஜாரா 93 ரன்னிலும் அவுட்டாக மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்