லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி! வங்கதேசத்துக்கு 175 ரன்கள் இலக்கு

 • News18
 • Last Updated :
 • Share this:
  வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி-20 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்துள்ளது.

  இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியிலுள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

  அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர், ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடியாக ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்துள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: