Home /News /sports /

INDvsNZ | இந்திய அணி 165 ரன்கள் குவிப்பு..!

INDvsNZ | இந்திய அணி 165 ரன்கள் குவிப்பு..!

INDvsNZ

INDvsNZ

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணயில் ரோஹித் சர்மா, முஹமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டு சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாடஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் மற்றவீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். வாய்ப்புக்காக காத்திருந்த சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவரார் என எதிர்பாபர்க்கப்பட்ட நிலையில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 11 ரன்னிலும் ஷ்ரோயஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட்டாகி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தனர்.

மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உடன் 39 ரன்கள் விளாசி இஷ் சோதி பந்துவீச்சில் அவுட்டானார்.  ஷிவம் துபே 12 ரன்களில் அவுட்டாக அடுத்துவந்த ஷிவம் துபே டக்அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் மனிஷ் பாண்டே 50 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இன்றையப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இஷ் சோதி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 
Published by:Vijay R
First published:

Tags: Ind vs NZ

அடுத்த செய்தி