• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • INDvBAN | வங்கதேச அணிக்கு 149 ரன்கள் இலக்கு!

INDvBAN | வங்கதேச அணிக்கு 149 ரன்கள் இலக்கு!

INDvBAN

INDvBAN

  • Share this:
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியதால் 148ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஹமதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகார் தவான் களமிறங்கினர். போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய ஹிட்மேன் வங்கதேசத்தை துவம்சம் செய்ய போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் ஓவரிலேயே ரோஹித் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சாஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் எல்.பி.டபுள்.யூ முறையில் ரோஹித் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கே.எல்.ராகுல் 15 ரன்னிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

நிதனமாக ஆடி வந்த ஷிகார் தவானும் 41 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய ஷிவம் துபே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி வீரர்கள் வங்கதேச பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறி வந்தனர்.



இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: