முகப்பு /செய்தி /விளையாட்டு / INDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு

INDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு

INDvSA

INDvSA

  • Last Updated :

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தொடக்க வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி தானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக தவான், ரோஹித் களமிறங்கினர். ரோஹித் 9 ரன்னில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தவான் மட்டும் அதிரடியாக விளையாடி 36 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணியின் மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

top videos

    இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

    First published:

    Tags: India team