• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup Ind vs Eng|இந்தியா-இங்கிலாந்து வார்ம்-அப் மேட்ச்: இந்தியா வெல்ல வாய்ப்பு- எப்படி?

T20 Worldcup Ind vs Eng|இந்தியா-இங்கிலாந்து வார்ம்-அப் மேட்ச்: இந்தியா வெல்ல வாய்ப்பு- எப்படி?

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் பிரச்சனை: இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் தொடக்கத்தில் இறங்குவது யார் இஷான் கிஷனா, அல்லது கே.எல்.ராகுலா என்ற பிரச்சனை உள்ளது. அதே போல் ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை எனில் நிச்சயம் அவரது இடம் அணியில் கேள்விக்குறியே. ஒருவேளை இன்று ரோகித் சர்மா உட்கார்ந்து கொண்டு இஷான் கிஷனையும் ராகுலையும் ஓப்பனிங் இறக்கலாம்.

    ஐபிஎல் 2021 தொடரில் ரோகித் சர்மாவை விடவும் பிரமாதமாக ஆடிய ராகுல் 30 சிக்சர்களுடன் 626 ரன்களை விளாசினார் ஸ்ட்ரைக் ரேட் 139. இஷான் கிஷன் பார்ம் அவுட் ஆகி கடைசியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 84 ரன்கள் விளாசித்தள்ளினார். ராகுல் மாறாக ஆடிய நல்ல இன்னிங்ஸ்கள் எதையும் தீர்மானிக்காத ஐபிஎல் போட்டிகளில் வந்தது என்றே கூற வேண்டும், ஆனால் ராகுல் நம்பகமான வீரர்.

    ஷர்துல் தாக்கூர் நிச்சயமாக ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் ஆடவே செய்வார், ஷர்துல் தாக்கூர் நம்பகமான பவுலர், பேட்டிங்கில் இன்னும் அவர் தன்னை டி20-யில் நிரூபிக்கவில்லை, ஆனால் மிகவும் அபாயகரமான வீரர் என்பதில் ஐயமில்லை.

    மேட்ச் வெற்றிக் கணிப்பு:

    இந்தியா டாஸ் வென்று முதலில் பவுல் செய்தால் இங்கிலாந்து அணியை 160-170 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினால் இந்தியா வெல்லும், அதே போல் இங்கிலாந்து டாஸ் வென்று இந்தியாவை 165-170 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடாதவர்கள், உதாரணமாக ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, பவுலரில் ஆதில் ரஷீத் உள்ளிட்டோர் ஆடவில்லை மாறாக இந்திய அணியில் அனைவருமே யுஏஇ பிட்ச்களை நன்கு அறிந்தவர்கள், இதனால் இந்தியா தான் இன்று வெல்லும் என்று சொல்ல முடியும். இங்கிலாந்து கேப்டன் மோர்கன், சேவாக் கூறுவது போல் டி20 கேப்டன்சிக்கு சரிப்பட மாட்டார்.

    இந்திய அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: கே.எல்.ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா/ ராகுல் சாகர் 

    மாறாக இங்கிலாந்து அணிக்குச் சென்றால் மோர்கனுக்கு தனி உத்வேகம் பிறக்கும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை இறுதிக்கு வழிநடத்தியதில் கேப்டன்சி பங்களிப்பில் மோர்கனுக்கு பங்கு உண்டு. ஆனால் இங்கிலாந்து என்றால் அவர் பேட்டிங்கும் பொறிபறக்கும் அவர் பார்முக்கு வராமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

    இன்று இங்கிலாந்து அணி இப்படி இருக்கலாம்: மோர்கன், ஜேசன் ராய், டேவிட் மலான், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், டேவிட் வில்லே, டாம் கரன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: