ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றார் ஸ்மிருதி மந்தனா
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றார் ஸ்மிருதி மந்தனா
ஆண்டின் சிறந்த வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மந்தனா 2021 ஆம் ஆண்டிற்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபியை வென்றுள்ளார், அவர் 22 சர்வதேச போட்டிகளில் 38.86 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தற்காக இந்த விருது பெற்றுள்ளார்.
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மந்தனா 2021 ஆம் ஆண்டிற்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபியை வென்றுள்ளார், அவர் 22 சர்வதேச போட்டிகளில் 38.86 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தற்காக இந்த விருது பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரிக்குப் பிறகு ஒருமுறைக்கு மேல் இந்த விருதை வென்ற வரலாற்றில் இரண்டாவது பெண் வீராங்கனை மந்தனா ஆவார். டாமி பியூமண்ட் (இங்கிலாந்து), லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா), கேபி லூயிஸ் (அயர்லாந்து) ஆகியோரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று கவுரவத்தை தட்டிச் சென்றுள்ளார் ஸ்மிருதி மந்தனா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில், இந்தியா சொந்த மண்ணில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது, இரண்டு வெற்றிகளிலும் மந்தனா முக்கிய பங்கு வகித்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 158 ரன்களை வெற்றிகரமான துரத்தும் போது மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார், இது தொடரை சமன் செய்ய உதவியது மற்றும் அதைத் தொடர்ந்து மற்றொரு ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் - 48* - சுற்றுப்பயணத்தின் இறுதி டி20 ஆட்டத்தில் மற்றொரு வெற்றிக்கு வழிவகுத்தது.
25 வயதான மந்தனாடெஸ்ட் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் எடுத்தார், அது டிராவில் முடிந்தது.
டாப்-ஆர்டர் பேட்டர், சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் இந்தியாவின் ஒரே வெற்றியில் 49 ரன்கள் எடுத்தார். டி20 தொடரில் அவர் 15 பந்துகளில் 29 மற்றும் அரைசதம் விளாசினார், ஆனால் இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை 2-1 என இழந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா நல்ல பார்மில் இருந்தார், ஒருநாள் தொடரில் தொடங்கி, அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார். சுற்றுப்பயணத்தின் ஒரே டெஸ்டில் அவர் ஒரு மறக்கமுடியாத முதல் சதத்தை அடித்தார் மற்றும் ஆட்டநாயகி விருதையும் பெற்றார். அவர் தனது இரண்டாவது டி20 அரைசதத்தை கடைசி டி20-யில் அடித்தார், இருப்பினும் இந்தியா தோல்வியடைந்து தொடரை 2-0 என இழந்தது.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரே ஒரு டெஸ்டில், இந்திய பெண்கள் அணியின் முதல் பகலிரவு பிங்க் பந்து போட்டியில் அவரது செயல்திறன் மிகவும் மறக்கமுடியாதது. தனது இயல்பான ஆட்டத்தை விளையாடினார், மேலும் விரைவு கதியில் அரைசதம் ஒன்றையும் அடித்தார், விளக்கொளியின் கீழ் எச்சரிக்கையுடன் விளையாடினார் மந்தனா.
மந்தனா 80 ரன்களில் கேட்ச் ஆனார், ஆனால் எல்லிஸ் பெர்ரியின் நோ-பால் மந்தனாவுக்கு வாழ்வு அளிக்க அவர் லைஃப்லைனை அதிகம் பயன்படுத்தி ஒரு பவுண்டரியுடன் தனது முதல் டெஸ்ட் சதத்தை ஸ்டைலாக எட்டினார். இந்தியாவை வலுவான நிலையில் வைத்த பிறகு, அவரது இன்னிங்ஸ் இறுதியாக 127 ரன்களில் முடிந்தது. ஆட்டம் டிராவில் முடிந்தது, மேலும் மந்தனா ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.