Home /News /sports /

இங்கிலாந்துக்கு சேவாக் ‘நச்’ அட்வைஸ்- லார்ட்ஸ் வெற்றியைக் கொண்டாடும் லெஜண்ட்கள்

இங்கிலாந்துக்கு சேவாக் ‘நச்’ அட்வைஸ்- லார்ட்ஸ் வெற்றியைக் கொண்டாடும் லெஜண்ட்கள்

லார்ட்ஸ் நாயகர்கள்

லார்ட்ஸ் நாயகர்கள்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது இந்திய அணி, இந்த வெற்றியை விவிஎஸ். லஷ்மண், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் கொண்டாடியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது இந்திய அணி, இந்த வெற்றியை விவிஎஸ். லஷ்மண், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் கொண்டாடியுள்ளனர்.

  5ம் நாள் அன்று இங்கிலாந்துக்கு 60 ஓவர்களில் 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி, ஆனால் அந்த அணி இந்திய ஆக்ரோஷத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 51.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

  சச்சின் டெண்டுல்கர்: இது உண்மையில் ஒரு பெரிய டெஸ்ட் மேட்ச் டீம் இந்தியா. ஒவ்வொரு கணத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். இந்தியா மீண்டு எழுந்ததும், மன உறுதியும் என்னைப் பொறுத்தவரையில் தனித்து நிற்கிறது, வெரி வெல் பிளேய்ட்.

  Watch Video: Lord's test: இங்கிலாந்து கொலாப்ஸ்- இந்தியா த்ரில் வின் - வீடியோ ஹைலைட்ஸ்
   சேவாக்: பல அணிகள் லார்ட்சில் இவ்வாறு திருப்பு முனை வெற்றி கண்டதில்லை. அயல்நாடுகளில் நாம் இப்போது பெற்ற வெற்றி போல் மற்ற அணிகள் செய்வது கடினம். ஒரு போதும்.... ஒரு போதும் இந்திய அணியை குறைத்து எடைபோட்டு விடாதீர்கள்.

  லஷ்மண்: ஒவ்வொரு இந்திய ரசிகரும் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைக்கும் ஒரு பிரமாதமான டெஸ்ட் போட்டியை கண்டோம். என்ன ஒரு பிரமாதமான டெஸ்ட் கிரிக்கெட் நாள். பும்ராவும் ஷமியும் நாளின் தொடக்கத்தில் பேட்டிங்கில் சவால் அளித்தனர். பிறகு சிராஜ், பும்ரா, ஷமி, இஷாந்த் அனைத்தையும் கொடுத்தனர். இந்தியா பரபரப்பான வெற்றியைப் பெற்றது.

  கங்குலி: “என்ன அட்டகாசமான வெற்றி, என்ன ஒரு கேரக்டர், என்ன ஒரு தைரியம் போட்டியை அருகில் இருந்து பார்க்கவே இன்பமாக இருந்தது, \

  யுவராஜ் சிங்: கிரேட் வின் பாய்ஸ், நம் பவுலர்கள் முழுதும் தங்களை அர்ப்பணித்தனர். ஆட்டத்தின் திருப்பு முனை பும்ரா, ஷமி பேட்டிங் கூட்டணி. முகமது சிராஜ் அற்புதமான ஸ்பெல். இந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் வீரர்களே.

  அனில் கும்ப்ளே: வெல் டன் டீம் இந்தியா, சூப்பர்ப் வெற்றி. ஒட்டுமொத்த அணியின் முயற்சி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முகமட் கைஃப்: இங்கிலாந்தை 2 செஷன்களில் அவுட் செய்ய பவுலர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அபாரம். ரகானே, புஜாராவுக்கும் பாராட்டுகள். ஷமி-பும்ரா மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டனர். ஆனால் கே.எல்.ராகுல் தன் கிளாசி பேட்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருதைத்தட்டி சென்றார், இது அவருக்கு கொடுக்க வேண்டிய விருதுதான்.

  3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India Vs England, Sachin tendulkar, Test match, Virender sehwag

  அடுத்த செய்தி