இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்

சந்திரா நாயுடு

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

  • Share this:
    இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவின் மகள் தான் சந்திர நாயுடு. சந்திரா நாயுடு இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஓய்வு பெற்ற பேரசிரியராக இருந்தார். இவர் தனது தந்தை சி.கே.நாயுடு குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி உள்ளார்.

    சந்திரா நாயுடு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சந்திர நாயுடு நேற்று தனது 88-வது வயதில் காலமானார். சந்திரா நாயுடு கல்லூரியில் படிக்கும் போது கிரிக்கெட் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை உலகத்தர வாய்ந்த நாடாக எடுத்து சென்றவர் சி.கே.நாயுடு. இவரது பெயரில் கிரிக்கெட்டில் இன்று பல வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெண் வர்ணனையார்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அன்றைய காலக்கட்டத்திலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய சந்திர நாயுடு பின் நாட்களில் தனது வர்ணனையாளர் பணியை தொடங்கினார்.

    சந்திரா நாயுடுவின் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: