Home /News /sports /

2ஆவது டெஸ்ட்: 326 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்

2ஆவது டெஸ்ட்: 326 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்

இஷாந்த் சர்மா (BCCI)

இஷாந்த் சர்மா (BCCI)

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் நிதான போக்கை கடைபிடித்தனர்.

  • Last Updated :
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பெர்த்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய அந்த அணி வீரர்கள் மார்கஸ் ஹாரீஸ், ஆரோன் ஃபின்ச் மற்றும் ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்தனர். முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் நிதான போக்கை கடைபிடித்தனர்.

பேட் கம்மின்ஸ்  மற்றும் டிம் பெய்ன்  இணை பொறுமையாக விளையாடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டதால், இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறியது. 7-வது விக்கெட்டுக்கு இந்த இணை 59 ரன்கள் சேர்த்த நிலையில், கம்மின்ஸ் 19 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கிளீன்போல்ட் ஆனார். அடுத்து டிம் பெய்ன்னும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியின் திரும்பினர்.
Published by:Yuvaraj V
First published:

Tags: India vs Australia 2018, Ishant sharma, Jasprit bumrah, Pat Cummins, Tim Paine, Umesh yadav

அடுத்த செய்தி