India vs Sri Lanka | இலங்கையை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி

India vs Sri Lanka

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி தொடரை கைப்ற்றியது உடன் வேறு எந்த அணியும் செய்யாத வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.

  • Share this:
    இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனைத் தொடர்ந்து அவிஷ்கா பெர்னான்டோ, மினோத் பனுகா ஆகியோர் களம் கண்டனர். மினோத் 36 ரன்களிலும், அவிஷ்கா 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் வந்த வீரர்களில் சரித் அசலன்கா 65 ரன்கள் குவித்தார்.தனஞ்சய டி சில்வா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சமிகா கருணாரத்னே 33 பந்துகளில் 44 ரன்களை விளாசி கடைசி நேர ரன்குவிப்புக்கு காரணமானார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Also Read :   ஓலிம்பிக் கிராமத்தில் உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்?

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பிரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் சொற்ப ரன்களிலும், ஹர்திக் பாண்டியாக ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 37 ரன்களிலும், குருணால் பாண்டியா 35 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

    Also Read : ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

    8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 49.1 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிய நிலையில், தீபக் சஹார் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தீபக் சஹார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இலங்கை அணிக்கு எதிராக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்துக்கு எதிராக 92 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதால், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (93) பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: