தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தொடர்ந்து 11 தொடர்களை சொந்தமண்ணில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை ரோஹித் சர்மா பெற்றார்.
இந்த தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் நீண்ட கால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடர்களை 2 முறை வென்று இருந்தது. 1994 - 2001 மற்றும் 2004 - 2008ல் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்து இருந்தது.
ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை இந்திய அணி தற்போது முறியடித்துள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி 11 தொடர்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை அதிக முறை வீழ்த்திய ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவை இந்திய அணி இதுவரை 14 முறை தோற்கடித்துள்ளது.
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.