அனைவருக்கும் தோனியின் அருமை இப்போது புரியும் - முகமது கைஃப்

பேட்டிங்க சிறப்பாக இருந்தும் பந்துவீச்சு, பீல்டிங் சரியாக இல்லாததால் தான் இந்திய அணி தோல்வியடைந்ததாக பலரும் கருத்து தெரித்து வந்தனர்

news18
Updated: March 11, 2019, 12:58 PM IST
அனைவருக்கும் தோனியின் அருமை இப்போது புரியும் - முகமது கைஃப்
எம்.எஸ்.தோனி
news18
Updated: March 11, 2019, 12:58 PM IST
இந்திய அணிக்கு தோனி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் இப்போது புரியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் போட்டி மெகாலயாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 95 ரன்களுக்கும், ஷிகர் தவான் 143 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 358 ரன்களை எடுத்தது.

இதையடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் களமிறங்கிய உஸ்மான் கவாஜா அதிரடியாக ஆடினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த பீட்டர் ஹேன்ட்ஸ்ஹம்ப்பும் அதிரடியாக ஆடி, இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சுகளைச் சிதறடித்தனர். கவாஜா 91 ரன்களும் ஹேன்ட்ஸ்ஹம்ப் 117 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகமாக ரன்கள் அடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேட்டிங் சிறப்பாக இருந்தும் பந்துவீச்சு, பீல்டிங் சரியாக இல்லாததால் தான் இந்திய அணி தோல்வியடைந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்
Loading...
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பகத்தில், ‘சமீபகாலத்தில் இந்தியாவின் மிக மோசமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இது. இதுபோன்ற நேரம் வரும் போது விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணிக்கு தோனி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் இப்போது புரியும் ’ என்று பதிவிட்டுள்ளார்.

First published: March 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...