முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி... இந்தியா தகுதி பெற்றது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி... இந்தியா தகுதி பெற்றது எப்படி?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டிக்கு புள்ளிகள் அடிப்படையில் இந்தியா தகுதி பெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உலகின் முன்னணி இரு அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தகுதி பெற்றவிட்டது. அதனுடன் மோதப்போவது யார் என்பதில் இந்தியா, இலங்கை அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை விளையாடுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் நுழைய இலங்கை 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்ற பெற வேண்டும்.

அதேபோல, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களம் கண்டுள்ளது. இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அல்லது டிராவை சந்தித்து, இலங்கை அணியும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-0 என தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் இலங்கையின் கனவை நியூசிலாந்து அணி முதல் போட்டியிலேயே தவிடு பொடியாக்கியுள்ளது. திரில்லிங்காக சென்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளிகள் அடிப்படையில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: அகமதாபாத் டெஸ்ட் : 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த நாதன் லியோன்…

எனவே, இந்தியா-ஆஸ்திரேலியா 4ஆவது டெஸ்ட் போட்டி முடிவு இந்தியாவை பாதிக்கப்போவதில்லை. வரும் ஜூன் 7ஆம் தேதி லன்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

First published:

Tags: ICC World Test Championship, India vs Australia, Team India, Test cricket