ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் நடராஜன்? இந்திய அணியில் முக்கிய மாற்றம்
India vs Australia | முதல் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட நவ்தீப் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடராஜன்
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 11:27 AM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட நவ்தீப் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. நவ்தீப் சைனி பந்துவீச்சு சிறப்பாக இல்லாத காரணத்தால் நடராஜன் இன்று களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
உத்தேச இந்திய அணி : ஷிகர் தவான், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சாஹல், முகமது ஷமி, ஜஷ்ப்ரித் பும்ரா, நடராஜன்
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.