Home /News /sports /

India vs South Africa 4th T20-அணியை மாற்றாமலே வெற்றி பெறுவோம் - திராவிட் ஃபார்முலா- வெறுப்பில் உம்ரன் மாலிக், அர்ஷ்தீப்

India vs South Africa 4th T20-அணியை மாற்றாமலே வெற்றி பெறுவோம் - திராவிட் ஃபார்முலா- வெறுப்பில் உம்ரன் மாலிக், அர்ஷ்தீப்

உம்ரன் மாலிக்- அர்ஷ்தீப் சிங்

உம்ரன் மாலிக்- அர்ஷ்தீப் சிங்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் இந்திய அணி தொடரை இழக்கும், ஆனால் அன்று சொரத்தேயில்லாமல் ஆடி கேட்ச்களை விட்டது போல் இன்றும் தென் ஆப்பிரிக்கா ஆடும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியை மாற்றாமலேயே 2 உதைகளுக்குப் பிறகு இந்தியா வென்றது. எனவே இந்த வின்னிங் சூத்திரத்தை மாற்ற செண்ட்டிமெண்ட் இடம் கொடுக்காது.

மேலும் படிக்கவும் ...
    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் இந்திய அணி தொடரை இழக்கும், ஆனால் அன்று சொரத்தேயில்லாமல் ஆடி கேட்ச்களை விட்டது போல் இன்றும் தென் ஆப்பிரிக்கா ஆடும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியை மாற்றாமலேயே 2 உதைகளுக்குப் பிறகு இந்தியா வென்றது. எனவே இந்த வின்னிங் சூத்திரத்தை மாற்ற செண்ட்டிமெண்ட் இடம் கொடுக்காது.

    எனவே ராஜ்கோட்டில் இன்றும் இந்திய அணியில் மாற்றமிருக்காது. இதனால் உம்ரன் மாலிக்கை பார்க்க ஆவலாக இருக்கும் கிரிக்கெட் உலகம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டியதுதான். அவர்களுக்கும் இது வெறுப்பையே ஏற்படுத்தும்.

    ராஜ்கோட் பிட்ச் வரலாறு:

    ராஜ்கோட் பிட்ச் எப்போதும் ரன்கள் மயமானது. 2013-ல் 202 ரன்களை இந்தியா சேஸ் செய்து வென்றது. 2017-ல் நியுசிலாந்து இங்கு 196 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்தது. 2019-ல் பங்களாதேஷ் எடுத்த 154 ரன்களை இந்தியா வெற்றிகரமாக விரட்டியது.

    தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் இந்தியாவை 11-16 ஓவர்களிடையே முடக்கி விடுகிறது, ஓவருக்கு 7.72 ரன்கள்தான் ஆவரேஜ், ஆனால் அவர்கள் 11-16 ஓவர்களில் ஓவருக்கு 11 ரன்கள் எடுப்பதாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .

    இந்திய அணியின் பிரச்சனை, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட்:

    இந்திய அணியில் விராட் கோலி, சூரிய குமார் யாதவ் மீண்டும் வந்தால் ஒருவர் இடம் பிடுங்கப்படும் அது உறுதி, அது யார் எனில் ஷ்ரேயஸ் அய்யர்தான். வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அடிக்கடி அவுட் ஆவதோடு இவரால் அடிக்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அய்யர் தன் அட்டாக்கிங் திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டேல் ஸ்டெய்ன், வாசிம் ஜாஃபர் ஆகியோர்.

    இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் 46 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 82% தான் டி20க்கு போதாது, மாறாக ஸ்பின்னர்களுக்கு எதிராக 27 பந்துகளில் 52 ரன்கள் 190க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட். எனவே இவர் இம்ப்ரூவ் ஆகாவிட்டால் இடத்தை இழக்க நேரிடும்.

    இன்னொரு பெரிய பிரச்சனை ரிஷப் பண்ட், பேட்டிங்கில் இவருக்கு டி20 கிரிக்கெட்டை சரியாக இவரால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது, கேப்டன்சியில் பெரிய முன்னேற்றம் தேவைப்படுகிறது.

    பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் ஓரளவுக்கு செஹல், டைட்டாக வீசும் ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் இருப்பதால் இவரது கேப்டன்சி விவகாரம் பெரிதாக வெளியே தெரியவில்லை.

    இந்திய அணி : இஷான் கிஷன், ருதுராஜ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், செஹல்.

    தென் ஆப்பிரிக்கா அணி: டீ காக் வந்தால் இவர்தான் இல்லையேனில் ரீசா ஹென்றிக்ஸ், பவுமா, டசன், மில்லர், கிளாசன், பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், கெகிசோ ரபாடா, கேஷவ் மகராஜ், ஆன்ரிச் நார்ட்யே, ஷம்சி
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, T20

    அடுத்த செய்தி