புதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்... இந்திய டெஸ்ட் அணி இதுதானா?

India vs New Zealand | காயத்தில் இருந்து இஷாந்த் சர்மா முழு உடல்தகுதி பெற்று உள்ளதால் வெலிங்டன் டெஸ்டில் அவரும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்...  இந்திய டெஸ்ட் அணி இதுதானா?
கோப்பு படம்
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெலிங்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. காயம் காரணமாக விலகி உள்ள ரோஹித் சர்மாவிற்கு பதில் தொடக்க வீரராக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன் செய்தியாளர்களை விராட் கோலி சந்தித்த போது, “ப்ரிதிவ் ஷா சிறப்பாக தான் விளையாடி வருகிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்“ என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் ப்ர்திவ் ஷா தொடக்க வீரராக களமிறங்குவார் என்று உறுதியானது.


Also Read : பாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி - வைரல் வீடியோ

மேலும் இஷாந்த் ஷர்மா அனுபவமிக்க பந்துவீச்சாளர். இதற்கு முன் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடி உள்ளார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு தேவைப்படும் என்றும் கூறியிருந்தார். காயத்தில் இஷாந்த் சர்மா முழு உடல்தகுதி பெற்று உள்ளதால் வெலிங்டன் டெஸ்டில் அவரும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா இருவரில் யாருக்கு தரப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. விக்கெட் கீப்பிங்கில் வாய்ப்புகாக ரிஷப் பந்த் காத்திருந்தாலும் விருத்திமான் சஹாவிற்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய உத்தேச அணி : மயங்க் அகர்வால், ப்ரிதிவ் ஷா, சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனும விஹாரி, விருதமான் சஹா, முஹமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா

Also Read : தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading