தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பார்ல் ( Paarl) நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த போட்டியில் இந்திய அணி செயல்பாடு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. பேட்டிங், ஃப்ல்டிங், பவுலிங் என 3 இந்திய அணி கோட்டை விட்டது. பல ரன்அவுட் வாய்ப்புகளை இந்திய அணி வீரர்கள் தவறவிட்டனர். அதே போல் பவுலிங்கில் முதலில் புலி பாய்ந்தாலும் கடைசியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங்கில் சரணடைந்தது.
மேலும் பேட்டிங்கிலும் தடுமாற்றம் கண்ட இந்திய அணி 31 ரன்களில் தோல்வி கண்டது. ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி மட்டுமே சிறப்பாக ஆடினார். இறுதியில் சர்துல் தாகூர் அதிரடி சற்று ஆறுதலாக இருந்தது. பந்துவீச்சில் சொதப்பினாலும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியதால் இன்றையப் போட்டியில் ஷர்துல் தாகூர் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு முக்கிய மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விஜய் ஹாசரே கோப்பையில் சதத்தில் மிரள வைத்தார் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம்பெறலாம். அதேப்போன்று 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒருவர் மட்டுக்கும் வாய்ப்பளித்து வேகப்பந்து வீச்சை பலப்படுத்தப்படலாம். அதன்படி அஸ்வினுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உத்தேச இந்திய அணி : ருத்துராஜ் கெய்க்வாட், ஷிகார் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், வெங்கடேஸ் ஐயர், சர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், யஸ்வந்திர சஹல்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.