ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs NZ | இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய மாற்றம்? விராட், டிராவிட் வியூகம்

Ind vs NZ | இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய மாற்றம்? விராட், டிராவிட் வியூகம்

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

ரகானே 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 272 ரன்கள் சராசரி 38.86. 2021-ல் 12 டெஸ்ட் போட்டிகளில் 407 ரன்கள் சராசரி 20.35. அவர் அணியில் நீடிப்பதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட்: இந்திய லெவன் இதுதான்

  நாளை, 3ம் தேதி மும்பையில் தொடங்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும். விராட் கோலி திரும்புகையில் அவர் மீது கடும் எதிர்பார்ப்புகளினால் அவருக்கும் நெருக்கடி உள்ளது.

  கடந்த டெஸ்ட் போட்டியில், கான்பூரில் நியூசிலாந்து அணி, ‘நாங்கள் ஒன்றும் தூக்கி ஓரங்கட்டப்படும் அணியல்ல’ என்பதை இந்தியாவுக்கு நிரூபித்து கடைசி வரை போராடி டிரா செய்தனர், எல்.பி. அச்சுறுத்தல், பந்துகள் உருளும் பிட்ச் ஆகிய எதிர்நிலைகளுக்கு எதிராக ட்ரா செய்தது பெரிய விஷயம்.

  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும், அதே தான் அவர்களுக்கும். இப்போதைக்கு இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர், ஜடேஜாதான் ஆடுகின்றனர். இப்போது விராட் கோலி வந்தால் கொஞ்சம் பலம் கூடும், ஆனால் அவரை வீழ்த்த கைல் ஜேமிசன் சபதம் பூண்டிருப்பார். கோலியும் நன்றாக பயிற்சி செய்து விட்டுத்தான் வருகிறார்.

  ரகானே 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 272 ரன்கள் சராசரி 38.86. 2021-ல் 12 டெஸ்ட் போட்டிகளில் 407 ரன்கள் சராசரி 20.35. அவர் அணியில் நீடிப்பதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை. அவரும் பங்களிப்பு செய்கிறேன்... என் சதம் முக்கியமல்ல.. அணிக்காக பங்களிப்புத்தான் முக்கியம் என்று சாமர்த்தியமாக பேசி வருகிறாரே தவிர ஆட்டம் போய் விட்டது. அவரது ஃபுட்வொர்க் மோசமாக இருக்கிறது.

  இதே பங்களிப்பை வேறு வீரரும் செய்வார், புதிய வீரர்களும் செய்வார்கள். நமக்குத் தேவை சீனியர் வீரர்களின் ஆணித்தரமான ஆட்டமே தவிர ஆளுக்கு 20-25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து விட்டு பங்களிப்பு செய்கிறோம் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

  செடேஷ்வர் புஜாரா கடந்த 2 ஆண்டுகளில் ஆடியதைப் பார்த்தோமானால், 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 163 ரன்கள் சராசரி 20.38.  2021-ல் கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் 12 டெஸ்ட்கள்ல் 626 ரன்கள் 31.30. சரி இவர்கள் இப்படியென்றால் விராட் கோலியே 2019-ல் காய்ஞ்சு போன வங்கதேச அணிக்கு எதிராக வீரத்தைக் காட்டி சதம் எடுத்ததோடு சரி. அதன் பிறகு 3 அரைசதங்கள்தான் எடுத்துள்ளார்.

  ஆனால் 2-வது டெஸ்டுக்கு ரஹானே, புஜாரா, ஷ்ரேயஸ் அய்யர் நீடிப்பார்கள் என்றே தெரிகிறது, பவுலிங்கில் நிச்சயம் இஷாந்த் சர்மாவின் நேர் நேர் தேமாவுக்கு இடமில்லை, நிச்சயம் கோலி சிராஜை கொண்டு வந்து விடுவார்.

  மயங்க் அகர்வாலும் 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 133 ரன்கள் சராசரி 16.63. 2021-ல் 2 டெஸ்ட் 64 ரன்கள் என்று வாய்ப்பை ஷ்ரேயஸ் அய்யர் போல் பயன்படுத்தவில்லை. அதனால் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் கோலி வருகிறார்.

  சாஹாவுக்கு கழுத்துப் பிரச்சனை இருந்தால் ஸ்ரீகர் பரத் தான் வருவார். இல்லையெனில் சாஹாவை ட்ராப் செய்தால் அது கழுத்து வலியுடன் அவர் கான்பூர் 2ம் இன்னிங்சில் ஆடிய மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் அர்த்தமில்லாமல் போய் விடும்.

  உத்தேச இந்திய லெவன் இதோ:

  ஷுப்மன் கில்

  புஜாரா

  ஷ்ரேயஸ் அய்யர்

  விராட் கோலி

  ரஹானே

  சாஹா/பரத்

  ஜடேஜா

  அஸ்வின்

  உமேஷ் யாதவ்,

  சிராஜ்

  அக்சர் படேல்

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, India vs New Zealand, Kane Williamson