ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பையில் 15 வருடங்களில் தோனி இல்லாத முதல் நாக் அவுட்டில் இந்திய அணி

உலகக் கோப்பையில் 15 வருடங்களில் தோனி இல்லாத முதல் நாக் அவுட்டில் இந்திய அணி

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக தோனி இல்லாத முதல் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி விளையாடுகிறது.

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி மூன்றாவது முறையக இறுதிப்போட்டி தகுதி பெற்றுள்ளது.

  இந்த நிலையில் நாளை நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

  இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் தோனி இல்லாமல், ஐசிசி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆட போகும் முதல் நாக் அவுட் போட்டி இதுவாகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

  இதையும் படிங்க: கோலியின் மற்றோரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

  மேலும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பைத் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தோனி ஆடி இருந்தார். இதன் பின்னர், இந்திய அணியும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டியிலும் முன்னேறவில்லை, கடந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறமால் வெளியேறியது.

  இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையில் தற்போது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளதால் தோனி இல்லாமல் இந்திய அணி ஆடும் முதல் ஐசிசி நாக் அவுட் போட்டியாக மாறி உள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Indian cricket team, MS Dhoni, T20 World Cup