• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அடேயப்பா.. இந்தியா- பாகிஸ்தான் மேட்ச இத்தனை கோடி பேர் பார்த்தார்களா... அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

அடேயப்பா.. இந்தியா- பாகிஸ்தான் மேட்ச இத்தனை கோடி பேர் பார்த்தார்களா... அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இதுவரையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

    7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12’ சுற்று ஆட்டத்தில் கடந்த மாதம் 24ம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில்  இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை சேர்த்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை பெற்றது.

    உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியையும் பாகிஸ்தான் பதிவு செய்தது. பொதுவாகவே, இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்றால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், அக்டோபர் 24ம் தேதி நடைபெற்ற போட்டியை பார்த்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஸ்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை  16.7 கோடி (167 மில்லியன்) மக்கள் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை 23.8 கோடி ( 238மில்லியன்) மக்கள் பார்த்துள்ளனர். மேலும், இதுவரை நடைபெற்ற டி20 ஆட்டங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற ஆட்டம் என்ற சாதனையையும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் படைத்துள்ளது.

    இதையும் படிங்க: உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ஆஷிஷ் நெஹ்ரா?


    கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை 13.6 கோடி பேர் பார்த்திருந்தனர். அதிக பார்வையாளர்களை பெற்ற ஆட்டம் என்ற சாதனையையும் இந்த ஆட்டம் பெற்றது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: இந்திய அணியின் பிரச்சனையே ‘ஹைப்’ தான் - நாசர் ஹுசைன் சூசகம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: