கோலியா? பாபரா? இப்பவே சண்டையை ஆரம்பித்த ரசிகர்கள்

india vs pakistan

உலக் கோப்பை டி 20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

 • Share this:
  இந்தியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பை போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் விளையாடவிருக்கும் அணிகள் குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

  இதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் குரூப் - ஏயில் முதலிடம் பிடிக்கும் அணியும், குரூப் - பியில் 2ம் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெற்றுள்ளன.

  குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் குரூப் - ஏயில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும், குரூப் - பியில் முதல் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெற்றுள்ளன.

  இந்தியா, பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளதால் போட்டிக்கான சுவாரஸ்யம் இப்போது ஆரம்பித்துவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பல ட்வீட்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

  தகுதிச்சுற்றுக்கான இரண்டு குழுக்களில் குரூப் ஏ யில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா அணிகளும், குரூப் பியில் வங்கதேசம் , ஸ்காட்லாந்து, பப்புவா நியூகீனி, ஓமன் நாடுகளும் இடம் பிடித்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: