Home /News /sports /

மாபெரும் சாதனைகளைப் படைத்த இந்திய அணி...!

மாபெரும் சாதனைகளைப் படைத்த இந்திய அணி...!

இந்திய அணி

இந்திய அணி

India vs Bangladesh | India Pacers Dismantle Bangladesh in Under Three Days

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

    கொல்கத்தாவில் 22-ம் தேதி தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அடுத்து விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் முக்கிய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்தது.

    இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் EBADAT HOSSAIN ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்டினர்.

    இதனால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



    மேலும், முதல் பகலிரவு டெஸ்ட் வெற்றி, தொடர்ந்து 4 டெஸ்ட் இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற ஒரே அணி,  சொந்த மண்ணில் தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டி வெற்றிகள் மற்றும் சொந்த மண்ணில் தொடர்ந்து 12 டெஸ்ட் தொடரை வென்ற அணி என்று இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் தொடர்கிறது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: India vs Bangladesh

    அடுத்த செய்தி