முகப்பு /செய்தி /விளையாட்டு / ODI Ranking: பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்திய வீராங்னைகள் முதலிடம் பிடித்து அசத்தல்!

ODI Ranking: பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்திய வீராங்னைகள் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஜூலன் கோஸ்வாமி.

ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஜூலன் கோஸ்வாமி.

India pacer #JhulanGoswami back at the top of #ICC Women’s #ODIRankings | முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோஸ்வாமி முதல் இடம் பிடித்திருந்தார்.

  • Last Updated :

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய வீராங்னைகள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

Indian Womens Team, இந்திய மகளிர் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய மகளிர் அணி. (ICC)

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், முதல் இடத்தில் ஸ்மிரிதி மந்தனா இருக்கிறார். கேப்டன் மிதாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, வேறு யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

Smriti Mandhana, ஸ்மிரிதி மந்தனா
அரைசதம் அடித்து அசத்திய ஸ்மிரிதி மந்தனா. (ICC)

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 2 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் படத்தை எட்டிப்பிடித்தார். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் முதல் இடம் பிடித்திருந்தார்.

Jhulan Goswami, ஜூலன் கோஸ்வாமி
மீண்டும் நம்பர் ஒன் இடத்தில் ஜூலன் கோஸ்வாமி. (ICC)

இவரைத் தவிர, ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி 5 இடத்திற்கு வந்தார். பூனம் பாண்டே ஒரு இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு 10 இடத்தில் உள்ளார்.

ஒரே போட்டியில் தோனி படைத்த மூன்று சாதனைகள்!

தோனி இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை - கேதர் ஜாதவ் புகழாரம்!

Also Watch...

First published:

Tags: ICC Ranking, Indian women cricket