• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி தடுமாற்றம்..!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி தடுமாற்றம்..!

INDvsNZ

INDvsNZ

  • Share this:
    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக உமேஷ் யாதவும், சுழற்பந்தில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெற்றிருந்தனர்.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ப்ரிதிவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். மயங்க் அகர்வால் 3 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த புஜாரா - ப்ரிதிவ் ஜோடி நிதானமாக விளையாடினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ப்ரிதிவ் 54 ரன்னிலும் அவுட்டாக புஜாராவும் 54 ரன்னில் வெளியேறினார். இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் கோலி இந்த முறையும் 3 ரன்னில் அவுட்டானார்.

    மிடில் ஆர்டரில் விஹாரி மட்டும் 55 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லதாம், டாம் ப்ளன்டெல் களமிறங்கி நிதானமாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: