IND vs AUS : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு... அணியில் முக்கிய மாற்றங்கள்
India vs Australia T20 | காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகி உள்ள ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சஹால் அணியில் இடம் பெற்றுள்ளார்.

IND vs AUS
- News18 Tamil
- Last Updated: December 6, 2020, 1:40 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. டி20 தொடரில் முதல் போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை வெல்லும். அதே சமயம் சொந்ந மண்ணில் தொடரை இழக்க கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருவதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.
சிட்னியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகி உள்ள ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சஹால் அணியில் இடம் பெற்றுள்ளார். மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக ஷ்ரோயஸ் ஐயரும் அதேப் போன்று ஷமிக்கு பதிலாக சர்துல் தாகூர் இன்றையப் போட்டியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றையப் போட்டியிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்யூவ் வேட் கேப்டனாக செயல்படுகிறார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹசில்வுட் அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக சேம்ஸ், ஸ்டோனிஸ் மற்றும் ஆன்ட்ரூ டை ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி : கே.எல்.ராகுல், ஷிகார் தவான், விராட் கோலி, ஷ்ரோயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹரதிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், நடராஜன், சாஹல்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. டி20 தொடரில் முதல் போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை வெல்லும். அதே சமயம் சொந்ந மண்ணில் தொடரை இழக்க கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருவதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.
சிட்னியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகி உள்ள ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சஹால் அணியில் இடம் பெற்றுள்ளார். மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக ஷ்ரோயஸ் ஐயரும் அதேப் போன்று ஷமிக்கு பதிலாக சர்துல் தாகூர் இன்றையப் போட்டியில் இணைந்துள்ளார்.
இந்திய அணி : கே.எல்.ராகுல், ஷிகார் தவான், விராட் கோலி, ஷ்ரோயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹரதிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், நடராஜன், சாஹல்