தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பார்ல் ( Paarl) நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இன்றையப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லை என்று கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். அதே சமயம் தென்னாப்பிரிக்கா அணியில் ஜேசனுக்கு பதிலாக சிசண்டா மகலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி : குயின்டன் டி காக்(w), ஜன்னேமன் மாலன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பாவுமா(c), டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிங்டி
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.