முகப்பு /செய்தி /விளையாட்டு / தீரும் 71 ஆண்டுகால தாகம்... வரலாற்றை மாற்றி எழுத இருக்கும் இந்தியா...!

தீரும் 71 ஆண்டுகால தாகம்... வரலாற்றை மாற்றி எழுத இருக்கும் இந்தியா...!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி

India vs Australia Test Series | 1948-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா விளையாடி வரும் நிலையில், ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாறு இருந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆகும் சூழல் நிலவுவதால், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அந்நாட்டு மண்ணில் வரலாறு படைக்க உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற, இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தலாக வெற்றி பெற்ற நிலையில், தொடரை இந்தியா கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், தொடரை வெல்லும் இலக்கு கைநழுவிப் போகும் வாய்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 600-க்கும் மேலாக ரன்களை குவித்தது. பவுலர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை சிதறடித்தனர்.

இந்நிலையில், சிட்னியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5-ம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டி டிரா ஆகப்போவது உறுதியானது.

1948-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா விளையாடி வரும் நிலையில், ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாறு இருந்தது. ஆனால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுத உள்ளது. இந்த சாதனை வெற்றியைக் கொண்டாட இந்திய அணியும், ரசிகர்களும் இப்போதே தயாராகி உள்ளனர்.

Also See..

First published:

Tags: India vs Australia 2018