Home » News » Sports » CRICKET INDIA NEED 407 AGAINST AUSTRALIA IN SYDNEY TEST VJR

சிட்னி டெஸ்ட் : இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயத்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்திருந்த போது கீரின் விக்கெட்டை பறிக்கொடுத்ததை தொடர்ந்து 2-வது இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

சிட்னி டெஸ்ட் : இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயத்தது ஆஸ்திரேலியா
India vs Australia
  • Share this:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி 312 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் சிறப்பாக விளையாடினர்.

மார்னஸ் 73 ரன்கள் எடுத்திருந்த போது நவ்தீப் சைனி பந்துவீச்சில் அவுட்டானார். அதை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் எடுத்தார். 81 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.


ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கீரின் தன் பங்கிற்கு 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்திருந்த போது கீரின் விக்கெட்டை பறிக்கொடுத்ததை தொடர்ந்து 2-வது இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ரன்கள் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இமாலய இலக்குடன் களமிறங்கி உள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டு வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading