பேட்டிங்கில் கோலி, பவுலிங்கில் பும்ரா... கடைசி 3 போட்டிகளிலும் ஒரே மிஸ்டேக்

பேட்டிங்கில் கோலி, பவுலிங்கில் பும்ரா... கடைசி 3 போட்டிகளிலும் ஒரே மிஸ்டேக்
பும்ரா - கோலி
  • Share this:
இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் கோலியும், பவுலிங்கில் பும்ராவும் கடைசி 3 போட்டிகளிலும் ஒரே தவறை மீண்டும் செய்துள்ளனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஆனால் ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தொடரை இழந்தது.

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்திலும் ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது ஒரு போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கடந்த 2 போட்டிகளிலும் 10 ஓவர்கள் வீசியும் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை. கடந்த 3 ஒரு நாள் போட்டிகளிலும் பும்ரா விக்கெட் எடுக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் போல்டாகி உள்ளார். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் விராட் கோலி போல்ட்டாவது இதுவே முதன்முறை. இன்றையப் போட்டியில் விராட் கோலி 15 ரன்னில் சவுதி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

இந்த தொடரில் பும்ரா மற்றும் கோலியின் சொதப்பலான ஆட்டம் நியூசிலாந்து அணியின்  வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இருவருமே அணியின் பலமான வீரர்கள் இவர்கள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading