முதல் பந்திலேயே முடிந்து போன இந்திய அணியின் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. ஆட்டத்தின் 2-வது பந்திலேயே இஷாந்த் பந்துவீச்சில் பிஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

news18
Updated: December 8, 2018, 8:49 AM IST
முதல் பந்திலேயே முடிந்து போன இந்திய அணியின் இன்னிங்ஸ்
புஜாரா
news18
Updated: December 8, 2018, 8:49 AM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி  250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைத்தது. முதல் வரிசை வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறிக் கொண்டிருந்தனர். லோகேஷ் ராகுல் (2), முரளி விஜய் (11), விராட் கோலி (3) என அனைவரும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து அவர் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 123 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 250 ரன்களை எடுத்திருந்தது.இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே முடிந்தது. முதல் பந்திலேயே ஷமி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்திலேயே இஷாந்த் பந்துவீச்சில் பிஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்களை எடுத்துள்ளது.

Also Watch...
Loading...
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்