சிட்னி முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி தோல்வி!

India Loss in Sydney 1st ODI Against Australia | பொறுமையாக விளையாடிய தோனி 51 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 133 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: January 12, 2019, 3:53 PM IST
சிட்னி முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி தோல்வி!
ஆஸ்திரேலிய அணி வெற்றி. (BCCI)
news18
Updated: January 12, 2019, 3:53 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.12) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Finch, virat Kohli, ஆரோன் பிஞ்ச், விராட் கோலி.
டாஸ் போடும் கேப்ப்டன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி. (Cricket Australia)


ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், கவாஜா 59 ரன்களும், மார்ஸ் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Khawaja, கவாஜா
இந்திய அணியின் பந்துவீச்சை விளாசிய கவாஜா. (Cricket Australia)


இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை அடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க வீரர் தவான் (0), கேப்டன் விராட் கோலி (3) மற்றும் அம்பதி ராயுடு (0) என மூன்று முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், ரோகித் சர்மா - தோனி ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டது.
Loading...
Rohit Sharma, Dhoni, ரோகித் சர்மா, தோனி
மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் தோனி. (Twitter)


பொறுமையாக விளையாடிய தோனி 51 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 133 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சில பவுண்டரிகளை விளாசி ஆறுதல் அளித்தார்.

Dhoni, தோனி
சர்வதேச அரங்கில் 68-வது அரை சதத்தைப் பதிவு செய்த தோனி. (BCCI)


இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Also Watch...

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...