INDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

Vijay R | news18-tamil
Updated: August 22, 2019, 8:32 PM IST
INDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!
INDvWI
Vijay R | news18-tamil
Updated: August 22, 2019, 8:32 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் ஆன்டிகுவா மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்குமென்பதால் டாஸ் வென்ற ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் ரோச் பந்துவீச்சில் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அவரை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் வெளியேறுவதற்குள் கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.


மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரோச் 2 விக்கெட்களையும், கேப்ரியல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர். லோகேஸ் ராகுல், ரஹானே பொறுமையாக விளையாடி வருகின்றர்.

இந்திய அணி : மயங்க் அகர்வால், லோகேஸ் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்ட்ன்), ரஹானே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), விஹாரி, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா

Also Watch

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...