ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்... ட்விஸ்ட் கொடுக்கும் வங்கதேச பவுலர்கள்

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்... ட்விஸ்ட் கொடுக்கும் வங்கதேச பவுலர்கள்

வங்கதேச அணியின் விக்கெட் விழுந்ததை கொண்டாடிய இந்திய அணி.

வங்கதேச அணியின் விக்கெட் விழுந்ததை கொண்டாடிய இந்திய அணி.

வங்கதேசம் தரப்பில் மெகிதி ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ், அஷ்வின் ஆகிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விளையாட உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில், எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.

பந்துவீச்சில் வங்கதேசம் திடீரென மிரட்டியுள்ளதால் நாளைய 4ஆம் நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. சிட்டோக்ரமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

70.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்திய அணியை விட 144 ரன்கள் அதிகமாகும். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கினர்.

புத்தாண்டு ஷாப்பிங் ஹாப்பியா! மீண்டும் ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன்

தொடக்க வீரராக களத்தில் இறங்கிய கே.எல். ராகுல் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஷகிப் சுழலில் நூருல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா 6 ரன்களில் வெளியேற இந்திய அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில்லும், விராட் கோலியும் ஆமை வேகத்தில் விளையாடினர்.

இருப்பினும் விக்கெட் இழப்பை தவிர்க்க முயன்ற இருவரின் போராட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கில் 7 ரன்களிலும் (35 பந்து), கோலி 1 ரன்னிலும் (22 பந்து) மெகிதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 37 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற தடுமாற்றத்திற்கு இந்திய அணி சென்றது.

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை எடுத்ததால் தோனி ‘ஹேப்பி’ – சி.எஸ்.கே. நிர்வாகி தகவல்

தற்போது ஆல்ரவுண்டர் அக்சர் படேலுடன் நைட் வாட்ச்மேன் ஜெயதேவ் உனாட்கட்டும் களத்தில் உள்ளனர். சிறப்பாக விளையாடிய அக்சர் 26 ரன்களை சேர்த்துள்ளார். உனாட்கட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது.

வங்கதேசம் தரப்பில் மெகிதி ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ், அஷ்வின் ஆகிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விளையாட உள்ளனர். அதே நேரம் விக்கெட்டுகள் மளமளவென விழுந்திருப்பதால் நாளைய 4ஆம் நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket